வெள்ளரிக்காய் பாயசம்
முதலில் ஜவ்வரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை துருவிக் கொள்ள வேண்டும்.


தேவையானவை:
வெள்ளரிக்காய் - 1
ஜவ்வரிசி - கால் கிண்ணம்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கிண்ணம்
தண்ணீர் - 2 டம்ளர்
பால் - 1 டம்ளர்
சர்க்கரை - கால் கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2-3 தேக்கரண்டி
முந்திரி மற்றும் பாதாம் - 2-3 தேக்கரண்டி
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை துருவிக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு வாணலியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். ஜவ்வரிசி பாதி வெந்ததும், அதில் வெள்ளரிக்காயை போட்டு, நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்தமும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பாயசத்தில் சேர்த்து கிளறினால், சுவையான வெள்ளரிக்காய் பாயசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...