சன் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாகி இருக்கும் தொடர் "எதிர்நீச்சல்'. இத்தொடர் தொடங்கியது முதலே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி, குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.
சின்னத்திரையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தேவயானி நடித்த "கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வம் இத்தொடரை இயக்குகிறார்.
இத்தொடரின் நாயகி ஜனனியாக மதுமிதா நடிக்கிறார். நகர வாழ்க்கையையும் - கிராமத்து வாழ்க்கையையும் இணைக்கும் கதை இது. எனவே, இத்தொடரில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளனர்.
இந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் அதன் வசனங்களும் கச்சிதமாக பொருந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வசனகர்த்தா யார் என்ற ரகசியம் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை , "கோலங்கள்' தொடரில் குட்டிப் பெண் ஆர்த்தியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை ஸ்ரீவித்யாதான்.
திருமணத்திற்கு பிறகு, பெரிய அளவில் நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்த ஸ்ரீவித்யா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, "எதிர்நீச்சல்' தொடரின் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமாகியிருக்கிறார்.