பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரட்  ராகி அடை

ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில்  பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழையைப் போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 12:30 am

எம்.சுகாரா ராமநாதபுரம்

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
துருவிய கேரட்  - ஒரு கிண்ணம்
மல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய்  - 2
புளித்த தயிர் -  அரை கிண்ணம்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில்  பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழையைப் போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும். கேரட் சிறிது வதங்கியதும், அதில் புளித்த தயிருடன் அரை டம்ளர்  தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.