சின்னத்திரை மின்னல்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று "கோகுலத்தில் சீதை'.
சின்னத்திரை மின்னல்கள்!
Published on
Updated on
1 min read


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று "கோகுலத்தில் சீதை'. இத்தொடரின் நாயகியாக வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆஷா கௌடா. இவருக்கு இதுதான் முதல் தொடர். தனது திரையுலக பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

உங்கள் குடும்ப பின்னணி என்ன?

பெங்களூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, படிப்பு முடித்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பொண்ணு நான். எங்கள் குடும்பத்தில் நிறைய ஜிம் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதனால், நானும் ஜிம் ட்ரெய்னராக வேண்டும் என்று நினைத்து, பயிற்சி எடுத்துக் கொண்டேன். பின்னர் சில ஆண்டுகள், ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்தேன். அந்த சமயத்தில், சும்மா விளையாட்டாக இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் போடத் தொடங்கினேன். எனது இன்ஸ்டாகிராமைப் பார்த்து, எனக்கு ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. அதுதான் என்னை வசுந்தராவாக மாற்றியுள்ளது.

ஏரோபிக்ஸ் பயிற்சி இப்பவும் தொடர்கிறதா?

நிச்சயமா. இப்பவும் ஷூட்டிங் முடிந்து பெங்களூரு போனா, ஏரோபிக்ல இறங்கிடுவேன். என்னைப் பொருத்தவரை அது எனக்கொரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். உடலுக்கும், மனசுக்கும் ஆரோக்கியத்தைத் தருவதாலேயே அந்த வேலை ரொம்பவும் பிடிச்சிருந்தது. நடப்பது, ஓடுவது, சைக்கிளிங், நீச்சல், டான்ஸ்னு அது ஒரு கலவையான உடற்பயிற்சி என்பதால் எந்த வயசுக்காரங்களும் தாராளமாக பயிற்சி எடுத்துக்கலாம்.

வசுந்தரா கதாபாத்திரம் குறித்து?

வசுந்தரா இவ்வளவு பிரபலம் ஆகும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தமிழ் இன்டஸ்ட்ரி தரும் ரீச் பெரிசா இருக்கு. இந்த அனுபவம் புதுசா இருக்கு.

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்குப் போனா சுலபமா என்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள், புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த லைஃப் எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது. அதனால் இனி இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தற்போது, கன்னடத்தில் ரெண்டு படம் கமிட் ஆகியிருக்கேன். இருந்தாலும், போய் நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பவும் இங்கேயே வந்துவிடுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com