கோடையில்... 

கறுப்பு நிற ஆடைகளையும், கறுப்பு  நிற குடையையும் தவிர்க்க வேண்டும்.
கோடையில்... 

தவிர்க்க வேண்டியது:

கறுப்பு நிற ஆடைகளையும், கறுப்பு  நிற குடையையும் தவிர்க்க வேண்டும்.
பாலியஸ்டர், கிரேப் போன்ற வியர்வை உறிஞ்சாத உடைகளையும் இறுக்கமான ஆடைகளையும் அணியக் கூடாது.
அதிக காரம், அதிக எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
கோதுமை உணவுகள் வறட்சித் தன்மையை ஏற்படுத்தும். காய்கறிகளைத் தனியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எனர்ஜியை குறைக்கும் கேழ்வரகு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சூடான காபி, டீ, பால் சாப்பிடக் கூடாது.
பர்கர், பீட்ஸா, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக மேக்கப் போடக் கூடாது.
கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

சேர்க்க வேண்டியவை:

சாப்பாட்டில் மோர் நிறைய சேர்க்க வேண்டும். தண்ணீர், கம்பங் கூழ்  அவ்வப்போது குடிக்கலாம்.
சாலட், கீரைகள், சீரகம், தனியா சேர்க்கப்பட்ட கூட்டு, வெங்காயம், முள்ளங்கி,  வெள்ளரி, எலுமிச்சையும்  உணவில் இடம்பெற வேண்டும்.
பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெண்டை போன்ற தண்ணீர்ச் சத்து காய்கறிகளையும், நெல்லிக்காயையும் சேர்க்க வேண்டும்.
வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர், பதநீர் என கோடைக்கு ஏற்றவைகளை உண்பது நல்லது.
வீட்டு ஜன்னல்கள், வாசல், திரைச்சீலைகள் போன்றவை கரும்பச்சை, கருநீலம் ஆகிய அடர்த்தியான வண்ணங்களில் இருக்க வேண்டும்.
தோலால் ஆன காலணியை அணிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com