கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாட்டி வைத்தியம்

நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

தினமணி

நான்கு ஓமவல்லி இலை, சிறிய துண்டு சுக்கு, ஐந்து நல்ல மிளகு, கருப்பட்டி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்துவர ஜலதோஷம் குணமாகும்.

தூக்கமில்லாது அவதிப்படுவோர் சிறிது சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு செவ்வாழைப் பழத்துடன் இரவு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

கொத்தமல்லி விதைகளை லேசாக வறுத்து, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கிறுகிறுப்பு மாறும்.
 

-ஆர்.ராதிகா

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால், நிவாரணம் கிடைக்கும். சுக்கு,  பனை வெல்லம்,  உளுந்து ஆகியவற்றை சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால், உடலுக்கு பலமுண்டாகும்.

மாதவிடாய் தள்ளிப் போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி. எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையில் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து அதில் ஓர் தேக்கரண்டியைத் தேனில் குழைத்து 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பிரச்னை சரியாகும்.

மழை,  குளிர்காலத்தில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப் பூவைப் போட்டு, வடிகட்டி பருகினால் சுவாசம் எளிதாகும்.  தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப் பூப்பொடி சேர்த்தால் சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.

பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப் பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.

தொண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்து அதை தேனில் குழைத்து அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால் கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம் பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.