வெண்ணெய் சீடை

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது மாவாகப் பிசைய வேண்டும்.
வெண்ணெய் சீடை
Updated on
1 min read

தேவையானவை:

பதப்படுத்திய அரிசி மாவு- 100 கிராம்
வறுத்த உளுந்த மாவு- 2 மேஜை கரண்டி
வெண்ணெய்- 2 மேஜை கரண்டி
பெருங்காயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது, சிறிதாகத் தெளித்து கெட்டியான மாவாகப் பிசைய வேண்டும். 

ஒரு வெள்ளைத் துணியைப் பரப்பு, மாவை மிகச் சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சீடை உருண்டைகளைப் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com