
தேவையான பொருள்கள்:
அவல் மாவு- 1 கிண்ணம்
பால்- 500 மி.லி.
பாதம் பவுடர்- 1 மேஜை கரண்டி
வெல்லம்- தேவையான அளவு
ஏலக்காய்த் தூள்- சிறிதளவு
நெய்- 1 தேக்கரண்டி
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய், கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும். சிறு உருண்டைகளாக உருட்டி, பாலுடன் பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறங்கினால், அவல் பால் கொழுக்கட்டை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.