47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாழைக்காய் வடை

வாழைக்காயை இரண்டாக வெட்டி தோலுடன் குக்கரில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.  வாழைக்காய் வெந்த பிறகு மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.  

News image
Updated On :18 டிசம்பர் 2022, 12:30 am

கவிதா சரவணன்


தேவையான பொருள்கள்:

வாழைக்காய் - 3
உப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் -1 (
பச்சை மிளகாய் -2 (
கறிவேப்பிலை - கொஞ்சம்
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1/4  தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
கரம் மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்-தேவையான அளவு


செய்முறை :  

வாழைக்காயை இரண்டாக வெட்டி தோலுடன் குக்கரில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.  வாழைக்காய் வெந்த பிறகு மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.  மசித்துவைத்துள்ள வாழைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி,  மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,  கடலைமாவு,  அரிசி மாவு , பெருங்காயத் தூள், தேவைக்கு உப்பு- இவை அனைத்தும் சேர்த்து மறுபடியும் நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும்,  கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு வாழைக்காய் கலவையில் இருந்துசிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை வடிவமாகத் தட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகும் வரை பொரித்துஎடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் வாழைக்காய் வடை ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.