மழைக்காலத்தில் உஷார்..!

மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், காய்கனிகளைப் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.
மழைக்காலத்தில் உஷார்..!
Updated on
1 min read


மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், காய்கனிகளைப் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.

காய்கனிகள்,  பழங்களின் மேல் படரக் கூடும் சில பூஞ்சைகளைத் தடுக்க 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கனிகளை முக்கி கழுவி, துணியால் துடைத்தெடுத்து உலர வைக்கலாம். வினிகருக்கு பூஞ்சை உருவாகுவதையும், அழுகுவதையும் தடுக்கும் தன்மையுள்ளது. 

புதினா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, துளசி போன்ற செடிகளின் தண்டுப் பகுதியை நீரில் முழ்கும்படி வைப்பதால்,  அவை வாடிப்போவதைத் தவிர்க்கலாம். 

காய்கனிகள், பழங்களைத் தனித்தனியாக  வைக்கவும்.

கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் போன்ற காய்கனிகளைப் புதியதாக வாங்குவதோடு , முடிந்தவரை விரைவில் சமைக்க வேண்டும். அவற்றை அடுத்த நாளுக்குப் பயன்படுத்த விரும்பினால், பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைக்கவும். பேப்பரில் வைத்தால் அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சப்படும்.

உருளைக்கிழங்கு,  வெங்காயம் முளைப்பதைத் தடுக்க குளிர்ந்த,  உலர்ந்த இடத்தில் வைக்கவும். இவற்றை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.ஏனெனில் இவை அதிக அளவில் நீர்கோர்க்க செய்வதோடு, அவற்றின் சுவையும் மாறும்.  

பொதுவாக கீரைகளில் அதிக அளவில் நீர், மண், சேறு இருக்கும். எனவே அவை விரைவில் அழுகிவிடும்.

கதவு, ஜன்னல்களை காலையில் திறக்காதீர்கள். ஏனெனில் பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகம் இருப்பதால் தொற்றுகள் அதிகம் பரவும்.

பச்சை வெங்காயத்தில் ஒவ்வாமையை விரட்ட கூடிய ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. உணவு எடுத்து கொள்ளும்போது சில துண்டுகள் பச்சையாக எடுத்து கொண்டால் அலர்ஜியிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

சளி உடலில் உறைவதை முற்றிலும் தவிர்க்கவும். குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு தேநீரில் அடிக்கடி ஏலக்காய், லவங்கம், அதிமதுரம் ஆகியவற்றை கலந்து குடித்தால் சளி கட்டுக்குள் இருப்பதுடன் உடல் வெப்பநிலையும் சீராகும்.

ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உடலில் அதிகம் உள்ளதால் இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி வந்தால் பாக்ட்ரியா, பூஞ்சை தொற்றுகளை தடுக்கும். அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து அலர்ஜியை கட்டுப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com