மருத்துவக் குறிப்புகள்..
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்துக்கு 2 முறை உட்கொண்டு வர விரைவில் குணமாகும்.


அல்சர் குணமாக இயற்கை வீட்டு வைத்திய மருத்துவக் குறிப்புகள்:
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்துக்கு 2 முறை உட்கொண்டு வர விரைவில் குணமாகும்.
சாதத்தில் தினமும் தேங்காய் பால் சேர்த்துகொண்டால், வயிற்றுப் புண் குணமாகும். மேலும், கொப்பரைத் தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
வேப்பிலையை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர அல்சர், வயிற்று பிரச்னைகளும் நீங்கிவிடும்.
அல்சருக்கு அகத்திக் கீரை நல்லது. தினமும் ஒரு கிண்ணம் அகத்திக் கீரையை சமைத்து உள்கொண்டு வர, விரைவில் குணமாகிவிடும்.
சீரகம், அதிமதுரம், தென்னம்பாளைப் பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்து பருகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...