ஸ்பெஷல்  ஸ்பைசி  சாதம் 

சாதத்தை  நன்றாக  குழைவாக  வடித்து தயிர் மற்றும் உப்பு  சேர்த்து  அழுத்தி பிசைந்து கொள்ளவும்.  
ஸ்பெஷல்  ஸ்பைசி  சாதம் 


தேவையானவை:

குழைத்து வடித்த சாதம் - 3 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 5
கடலைப் பருப்பு - கால் தேக்கரண்டி
தயிர் - 2 கிண்ணம்
கொத்துமல்லி - 1 பிடி
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கருப்பு திராட்சை - கால் கிண்ணம்
இஞ்சி - 1 அங்குல துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
புதினா - கால் பிடி
லெமன் ஜுஸ் - 1 சொட்டு

செய்முறை:

சாதத்தை நன்றாக குழைவாக வடித்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அழுத்தி பிசைந்து கொள்ளவும். ஒரு பச்சை மிளகாய் தவிர மற்ற அனைத்து பச்சை மிளகாயையும் நன்கு பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடலைப் பருப்பு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து இஞ்சி போட்டு வதக்கவும். வதக்கியவற்றையும். திராட்சையும் கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கிளறவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி மற்றும் வைத்துள்ள மிளகாயை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும்.

அரைத்தவற்றை போட்டு கிளறி பச்சை வாடை போனதும் எடுத்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். புதினா நறுக்காமல் அதிக நீர் விட்டு வேக வைத்து எடுக்கவும். சிறிது உப்பு சேர்த்து கலந்து ஒரு சொட்டு லெமன் பிழிந்து மிக்ஸ் பண்ணி கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். மிளகை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கலக்கவும். சாதம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com