ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாடியில் மலரும் தாமரை.. அல்லி..!

மங்களுரு கடலோர  நகரமான  கோட்டிகரில்  வசிக்கும் ஸ்நேகா  பட்டுக்கு   சிறுவயது முதலே, வீட்டைச் சுற்றிலும்  பசுமையாக  வைத்திருக்கவும், குளம் போன்ற  நீர்நிலைகளில்  வளர்ந்து  மலரும்  பூக்களை  தன் வீட்டிலேயே

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 12:30 am

பூா்ணிமா

மங்களுரு கடலோர நகரமான கோட்டிகரில் வசிக்கும் ஸ்நேகா பட்டுக்கு சிறுவயது முதலே, வீட்டைச் சுற்றிலும் பசுமையாக வைத்திருக்கவும், குளம் போன்ற நீர்நிலைகளில் வளர்ந்து மலரும் பூக்களை தன் வீட்டிலேயே சிறிய குளமொன்றை அமைத்து வளர்ப்பதற்கும் மிகவும் பிடிக்குமாம்.

மங்களூரு எஸ்டிஎம் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் ஸ்நேகா பட், நீர் நிலைகளில் வளரும் தாமரை, அல்லி போன்ற மலர்ச் செடிகளை தன் வீட்டு மாடியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் உள்ள தொட்டிகளில் வளர்க்க ஆசைபட்டார். இதை ஒரு பொழுது போக்காக கருதாமல் பரிசோதனை முறையில் செயல்படுத்த விரும்பியவர், இதற்காக நாட்டின் பல பகுதிகளில் நீர்நிலைகளில் வளரும் மலர்ச் செடிகளை சேகரிக்கத் தொடங்கினார். ஏற்கெனவே மங்களுரு வருவதற்கு முன் தான் வசித்து வந்த சாமராஜ் நகரிலும், பெரிய பட்ணாவிலும் இருந்தபோது வீட்டுத் தோட்டத்திலேயே சிறிய குளம் ஒன்றை அமைத்து தாமரை, அல்லி போன்ற மலர்களை வளர்த்த அனுபவம் இருந்ததால், வீட்டு மாடியிலேயே தாமரை, அல்லி போன்றவைகளை வளர்க்கத் தொடங்கினார். முதலில் இவரது முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை.

இது தொடர்பாக தோட்டக்கலை வல்லுநர்களையும், சமூக வலை தளங்களிலும் சந்திக்கத் தொடங்கினார். இவரைப் போலவே நீர் நிலைகளில் வளரும் மலர்களை வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கும் சிலர், தங்கள் அனுபவங்களை முகநூலில் பகிர்ந்து வருவதை அறிந்த ஸ்நேகா, அவர்களுடன் தொடர்பு கொண்டபோது பலர் இவருக்கு உதவ முன் வந்தனர். அவர்கள் தந்த தகவல்களால் இவர் எதிர்பார்த்தது போலவே தொட்டிகளில் தாமரையும், அல்லியும் மலரத் தொடங்கின. தமிழ்நாடு, கேரளா, அகமதாபாத் போன்ற இடங்களிலிருந்தும் தருவித்த செடிகளை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர். நம்முடைய நாட்டில் மட்டுமின்றி தாய்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தும் பலர் தங்கள் நாட்டுச் செடிகளை அனுப்பி வைத்தனர். தற்போது இவரது மாடி தோட்டத்தில் 15 வகையான தாமரை, 60 வகையான அல்லி மலர்கள் இரவு பகலாக மலர்ந்து மணம் வீசுகின்றன. இது தவிர, 45 வகையான நீர் நிலைகளில் வளரும் செடிகளும் தொட்டிகளில் இடம் பெற்றுள்ளன.

தொட்டிகளில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் இனப் பெருக்கம் செய்யாமலிருக்க தேவையான மருத்துகளை தெளிப்பதோடு, மாட்டு சாணம் போன்ற இயற்கையான எருக்களை பயன்படுத்துவதால் மலர்கள் செழிப்பாக மலர்கின்றன. இயற்கைச் சூழலாக இருப்பதால் பறவைகள், வண்ணத்துச்பூச்சிகள், தேனீக்களும் தேடி வருகின்றன. சுற்றுப்புறங்களும் குளுமையாக இருக்கிறது.

இந்த மலர்கள் மருத்துவ குணம் கொண்டதோடு, வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. என்னைப் போன்று நீர்நிலைகளில் வளரும் செடிகளை வீட்டிலேயே வளர்க்க விரும்புகிறவர்களுக்கு வர்த்தக நோக்கமின்றி செடிகளை கொடுக்கிறேன். தேவையான ஆலோசனைகளும் வழங்குகிறேன். மேலும் பொது முடக்கம் காரணமாக வேலையை இழந்த பலர், இதை ஒரு தோட்டக்கலையாக கருதி செடிகளை வளர்த்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்னுடைய இந்த முயற்சிக்கு கணவர் நவிஷ் மற்றும் மகள் சமண்வி உறுதுணையாக உள்ளனர்'' என்கிறார் ஸ்நேகா பட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.