ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மிக்ஸி டிப்ஸ்...

மிக்ஸியை  ஹைவோல்டேஜில்  இருக்கும் போதுதான்  உபயோகிக்க வேண்டும். லோ வோல்டேஜில்  இயக்கக் கூடாது.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 12:30 am

நெ. இராமன்


மிக்ஸியை  ஹைவோல்டேஜில்  இருக்கும் போதுதான்  உபயோகிக்க வேண்டும். லோ வோல்டேஜில்  இயக்கக் கூடாது.

ஜாரில்  3-இல் 2 பங்கு  தானியங்களையேப் போட்டு  அரைக்க வேண்டும். அதிகமாகப் போட்டால்   மிக்ஸி பழுதாகிவிடும். கெட்டியாக மாவை அரைத்தாலும்  மிக்ஸி  கெட்டுவிடும்.

மிக்ஸி  பிளேடுகளை  எக்காரணம்  கொண்டும்  சானை பிடிக்கக் கூடாது. மிக்ஸி  பிளேடுகள்   மோட்டாரின்  வேகத்தைப் பொறுத்தே  நைசாக  அரைக்கும்.

மிக்ஸி  பிளேடுகள்  மழுங்கிவிட்டால்  கல் உப்பை  ஒரு கையளவு  எடுத்து மிக்ஸியில்  போட்டு  ஓரிரு நிமிடங்கள்  மிக்ஸியில்  ஓட்டினால்  பிளேடுகள் கூர்மையாகிவிடும்.

சூடான  பொருள்களை  மிக்ஸியில்  அரைப்பதைத் தவிர்க்கவும்.  மிக்ஸி ஓடும்போது  ஒரு கையால் மூடியை  அழுத்தமாகப்  பிடித்துக் கொள்ளவும்.

அரைக்கும் பொருள்களும்  பிளேடு  சுலபமாகக்  சுற்றக் கூடிய  அளவு தண்ணீர் விட்டு  அரைக்க வேண்டும்.  இல்லையேல்  பிளேடு  உடைந்து விடும்.  அல்லது மோட்டார்  எரிந்துவிடும்.

இட்லிக்கு  அரிசியை  ஊறவைக்கும்போது  இரவே  ஊற வைத்துவிட வேண்டும். இதனால் மிகச் சீக்கிரமாக  அரைத்து  விடலாம்.  மிக்ஸி  சூடாவதையும் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.