
நெல்லி முள்ளி, வெந்தயம் சிறிது, மிளகு ஆகியவற்றை ஊற வைத்து நைசாக அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறியதும் அலசினால் பொடுகு தொல்லை போய்விடும்.
வேப்பிலையை மசிய அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, பால் மற்றும் கடலை மாவைக் கலந்து முகத்தில் நன்கு தடவி சுமார் கால்மணி நேரம் கழித்து வெந்நீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் பருக்கள் நீங்கி புண் ஆறும்.
தொண்டைக் கமறல் தீர கற்பூரவள்ளிச் சாறில் கற்கண்டுத் தூளைப் போட்டுக் குடித்தால் தொண்டைக் கமறல் சரியாகும்.
தலைவலி விடாது வலித்தால் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி பாலில் வேக வைத்து விழுதுபோல் அரைத்து தலையில் தடவி நன்றாக ஊறிய பின் நீரில் அலசினால் முடி சுத்தமாகவும், பட்டு போன்று மிருதுத் தன்மையுடனும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.