ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கம்பு அப்பம்

அரிசி, உளுத்தம் பருப்பு, கம்பு மூன்றையும் ஊறவைத்து, உப்பு, வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

News image
Updated On :2 ஜூலை 2022, 5:14 pm

தேவையானவை: 

கம்பு-100 கிராம்
அரிசி- 50 கிராம்
உளுத்தம் பருப்பு- 50 கிராம்
பச்சை மிளகாய்-3
தேங்காய்த் துருவல்-1 மூடி
தயிர்- 50 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- 1 படி
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

அரிசி, உளுத்தம் பருப்பு, கம்பு மூன்றையும் ஊறவைத்து, உப்பு, வெங்காயம், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். தயிரை தேவையானால் மட்டும் கலக்கவும். வானலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் அப்பமாக மாவை வட்டமாக ஊற்றவும். வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.