சிறுகீரை கட்லெட்
சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும்,


தேவையானவை:
சிறுகீரை- ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது)
உருளைக் கிழங்கு-3
பொடித்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த அவல்- தலா 3 மேஜை கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய், பிரெட் துண்டுகள்- தலா 3
சோளமாவு- இரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும், இதில் சிறு கீரையைச் சேர்த்து பொடித்த வேர்க்கடலை, இஞ்சி- பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிரெட்டை தண்ணீரில் முக்கி உடனே பிழிந்து எடுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைத்து வைத்த கலவையில் இருந்து சிறிது எடுத்து, கட்லெட்டாகத் தட்டி சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து, அவல் பொடியில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...