சின்னத்திரை மின்னல்கள்!: சின்னத்  திரையிலிருந்து.. பெரிய திரைக்கு!

சின்னத்திரை பலருக்கும் வெள்ளித் திரைக்குச் செல்லும் ஏணியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக செய்தி வாசிக்கும் பெண்கள் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமாகியிருக்கிறார்கள்.
சின்னத்திரை மின்னல்கள்!: சின்னத்  திரையிலிருந்து.. பெரிய திரைக்கு!
Published on
Updated on
2 min read

சின்னத்திரை பலருக்கும் வெள்ளித் திரைக்குச் செல்லும் ஏணியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக செய்தி வாசிக்கும் பெண்கள் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமாகியிருக்கிறார்கள்.

ஃபாத்திமா பாபு :

ஃபாத்திமா பாபு சுமார் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக தூர்தர்ஷன், தனியார் தொலைகாட்சிகளில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து முத்திரை பதித்தவர். டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தஃபாத்திமா பாபு பிறகு திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவே இளமையாகவும், முதுமையான வேடங்களிலும் நீண்ட நாள்கள் நடித்து வந்தார். ஃபாத்திமா நடித்த படங்களை பட்டியல் போட்டால் நீளும். இவரது அனுபவத்திற்கும் புகழுக்கும் ஒரு அங்கீகாரம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃ பாத்திமா பாபு பங்கேற்றது.

அனிதா சம்பத்

ஃபாத்திமா போலவே அனிதா சம்பத் செய்தி வாசிப்பில் பிரபலமானவர். செய்தி வாசிப்பில் பல ஆண்டு அனுபவம் அனிதாவுக்குச் சொந்தம். போலவே அனிதாவுக்கு ரசிகர்கள் கூட்டம் தானாகச் சேர்ந்தது. அனிதாவின் அடுத்த நகர்வு "பிக் பாஸ் சீசன் 4 " ஆக அமைந்தது. அனிதாவின் அடுத்த இலக்காக அமைந்தது திரைப்படம். "விமல்' படத்தில் அனிதா நடித்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனிதா சம்பத்திற்குக் கிடைத்துள்ளது.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பில் காலடி எடுத்து வைத்தது 2011-இல் தான். அடுத்ததாக விஜய் டிவியில் "கல்யாணம் முதல் காதல் வரை' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் செய்தி வாசிப்பை ஓரம் கட்டினார். தொகுப்பாளினியாக மாறிய பவானி "ஜோடி நம்பர் 1', "சூப்பர் சிங்கர்' மற்றும் "கிங்ஸ் ஆப் டான்ஸ்' நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். பிறகு பவானியை வெள்ளித்திரை வரவேற்றது. "மேயாத மான்' படத்தில் நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், பல படங்களில் நடித்து வருகிறார்.

திவ்யா துரைசாமி

சமூக வலைதளங்களிலும், செய்தி வாசிப்பு தளத்திலும் ஒரே சமயங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர் திவ்யா துரைசாமி. திவ்யாவுக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. நடிகர் சூர்யா நடித்து தயாரித்து வெளியாகியிருக்கும் "எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்கள் நினைவில் நிற்கும் முக்கிய பாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார்.

லாஸ்லியா மரியநேசன்

ஒரே சமயத்தில் தொகுப்பாளினியாகவும், செய்தி வாசிப்பாளராகவும் வெற்றிகரமாகப் பயணித்தவர்தான் லாஸ்லியா மரியநேசன். "பிக் பாஸ் சீசன் 3' ல் லாஸ்லியா போட்டியாளராக பங்கு பெற்றதும் ஒரு திருப்பம் அவருக்காகக் காத்திருந்தது. "பிக் பாஸ் சீசன் 3' மூலம் புகழின் உச்சியை லாஸ்லியா தொட்டார். லாஸ்லியா குறித்து எழுதாத ஊடகம் இல்லை. தொடர்ந்து அடுத்த பாய்ச்சலுக்கு லாஸ்லியா தயாரானார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்து வெளியான "பிரெண்ட்ஷிப்' படத்தில் லாஸ்லியாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லாஸ்லியா கை வசம் சில படங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com