தேங்காய்  உப்புமா

தேங்காய்  உப்புமா

இரண்டு வகை அரிசியையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அவற்றோடு உப்பு, புளி, தேங்காய்த் துருவல், மிளகாய்வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

தேவையானவை:

பச்சரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் - 10
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - போதுமான அளவு
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை:

இரண்டு வகை அரிசியையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் கொட்டி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு அவற்றோடு உப்பு, புளி, தேங்காய்த் துருவல், மிளகாய்வற்றல் ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

இப்படி அரைத்த மாவுடன் போதுமான தண்ணீர் சேர்த்து நீர்த்த தோசை மாவு போல் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு தாளிதம் செய்து கரைத்த மாவை வாணலியில் கொட்டி இடைவிடாது கிளற வேண்டும். நீர் நன்கு வற்றி உப்புமா பதம் வந்ததும் அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com