கோடைக்கால  அழகு குறிப்புகள்!

கோடைக்காலம்  தொடங்கியதும் சில  அழகு குறிப்புகளை  பின்பற்றினால்,   கோடையில்  ஏற்படும்  வெம்மை, வியர்வை,  தோல்  பிரச்னைகள்,  மற்றும்  தலைவலி, கண் எரிச்சல் போன்றவற்றை போக்கலாம்.
கோடைக்கால  அழகு குறிப்புகள்!
Published on
Updated on
1 min read


கோடைக்காலம் தொடங்கியதும் சில அழகு குறிப்புகளை பின்பற்றினால், கோடையில் ஏற்படும் வெம்மை, வியர்வை, தோல் பிரச்னைகள், மற்றும் தலைவலி, கண் எரிச்சல் போன்றவற்றை போக்கலாம்.

கோடை காலத்தில் வாரம் மூன்று முறையாவது தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்வது மிக நல்லதாகும்.

ஷாம்புக்குப் பதிலாக சீயக்காய்ப்பொடி பயன்படுத்துதல் நல்லதாகும்.

நெல்லிக்காய்ப் பொடியை தலையில் தேய்த்து குளிப்பது உடலுக்கும், தலைக்கும் குளிர்ச்சியைத்தரும்.

தண்ணீரில் வெட்டி வேரைப்போட்டு ஊற வைத்து இந்த நீரால் குளித்து வர வியர்வை நாற்றம் நீங்கும் வியர்வையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து இதோடு சிறிதளவு பாலைக்கலந்து பஞ்சால் தொட்டு முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தைக் கழுவி வர வெயிலால் முகம் கருப்பாகாது முகம் பளிச்சென ஆகும்.

சந்தனத்தைப் பன்னீரில் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வர வியர்க்குரு வராது.

குளிக்கும் நீரில் எலுமிச்சை இலைகளைப் போட்டு குளிக்க அல்லது யூடிகோலோன் ஓரிரு துளிகள் சேர்த்து வர வியர்வை நாற்றம் ஏற்படாது.

சந்தனம் மற்றும் எலுமிச்சை கலந்த பவுடர்களை பயன்படுத்துதல் நல்லது .

வெயிலினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க முள்ளிங்கிச்சாறு, வெள்ளரிச்சாறு, பன்னீர் இம்மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர கரும்புள்ளிகள் மட்டுமின்றி முகப்பருக்களும் மாறும்.

நன்கு கனிந்த பூவன் பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட முகச்சுருக்கம் மறையும்.

குளித்து முடிந்ததும் உடனேயே பவுடர் அல்லது டியோடரண்ட்களை போடக் கூடாது.

கோடை காலத்தில் அதிகமாக காரம் சேர்த்தல் மற்றும் சூடான உணவுகளை பயன்படுத்துதல் உடம்பின் சூட்டை மேலும் கூட்டி விடும்.

- அ.சித்ரா அனந்தகுமார், கன்னியாகுமரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com