தக்காளி காய் பிரியாணி

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
தக்காளி காய் பிரியாணி

தேவையானவை

பாசுமதி அரிசி      -    200 கிராம்
தக்காளி காய் - 100 கிராம் ( நீளவாக்கில் நறுக்கியது)
வெங்காயம் -  2
தண்ணீர்  -     300 மிலி
பச்சை மிளகாய் - 2
தளியா, மிளகாய் தூள் -  தலா அரை தேக்கரண்டி 
மல்லி இலை - சிறிது
புதினா -  சிறிது
எண்ணெய்-  3 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - சிறிது
மஞ்சள் தூள்    -சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை- தலா ஒன்று
உப்பு   - தேவைக்கேற்ப

செய்முறை: 

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கி,  பச்சை மிளகாய்,   நீள வாக்கில்  நறுக்கிய  தக்காளி ,  சேர்த்து வதக்கி, தனியா, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மிதமான சூட்டில்  5 நிமிடம் வேக விடவும். நீர் ஊற்றி கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் பாசுமதி அரிசியை போடவும். குக்கரை மூடி வெயிட் போட்டு தீயின் அனலை மிதமாக வைத்து இரண்டு விசில்  வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து  நறுக்கிய புதினா, கொத்துமல்லி சேர்த்து கிளறி விடவும். சுவையான , வித்தியாசமான தக்காளி காய்  பிரியாணி  ரெடி. தேவைப்பட்டால்  உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். குருமா, வெங்காய தயிர் பச்சடி நல்ல ஜோடி.  குழந்தைகள்,பெரியவர்கள் என எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com