தக்காளி காய் கூட்டு

தக்காளி காயை நன்கு கழுவி  நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
தக்காளி காய் கூட்டு

தேவையானவை :

தக்காளி காய்  - கால் கிலோ
துவரம் பருப்பு - 50 கிராம் 
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
வர மிளகாய் - 3 
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை: 

தக்காளி காயை நன்கு கழுவி  நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை , வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கிய  தக்காளிக்காய் போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவிப் போட்டு நன்கு கிளறவும்.  பின்  அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்கவும். தக்காளி காய், பருப்பு நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும்  தேங்காய்த் துருவல்  சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளிக் காய்  கூட்டு தயார். நல்ல சத்தான புதுமையான இந்த கூட்டு சாம்பார், ரசம், சாத்திற்கு நல்ல ஜோடி. துவரம்பருப்புக்கு பதில் சிறுபருப்பு உபயோகித்தும் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com