கலோரியைக் குறைங்க... நிம்மதியாய் வாழுங்க...!

பலவிதமான உணவுகளால் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
கலோரியைக் குறைங்க... நிம்மதியாய் வாழுங்க...!

பலவிதமான உணவுகளால் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. உடலைப் பராமரிக்க ஆசைப்படுவர்கள் இன்று அதிகம். அவர்களுக்கு கலோரியைக் குறைக்க சில யோசனைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் எதை முடியுமோ அதை மேற்கொண்டு,  உடலை பேணிப் பாதுகாக்கலாம்:

நடைப்பயிற்சி: 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் 150 கலோரி இழப்பு ஏற்படும். அதே சமயம் ரத்தம் எளிதில் சுற்றி வரவும் உதவும். இதய ஆரோக்கியமும் மேம்படும்.

வேக நடைப்பயிற்சி: 30 நிமிடங்கள் வேகமாக நடந்தால், 250 கலோரி இழப்பு நிச்சயம். வாரத்துக்கு 3 நாள்கள் இப்படி வேக நடைப்பயிற்சி செய்தால், உடலில் நல்ல கலோரி இழப்பை உண்டாக்கும்.

சமையறைப் பயிற்சிகள்: பல பெண்கள் சமையல் அறையிலேயே உடற்பயிற்சியை கைகாலை ஆட்டி செய்வர். இப்படி 30 நிமிடங்கள் செய்தால், 150-250 கலோரி இழப்பு ஏற்படும். 

சைக்கிள் பயிற்சி: ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 600 கலோரி இழப்பு ஏற்படும். மூட்டுகளும் சதை பிடிப்பின்றி இயல்பாக இயங்க உதவும். நம்மை டிரிம்மாகவும் மாற்றும்.

விளையாடுதல்:  பிடித்து.. ஓடியாடி,. துள்ளி விளையாடினால் 30 நிமிடங்களில் 100 கலோரியை இழக்கலாம். 

ஓடுதல்: 30 நிமிடங்களில் 300 கலோரியை எரிக்கலாம். தொடர்ந்து ஓடுவதால் மட்டுமே சாத்தியம். வெறும் 100 மீட்டர் ஓடி நிறுத்தினால், 6 கலோரி மட்டுமே குறையும்.

தோட்ட வேலை: ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்தால், 300 கலோரி எரிந்து விடும். தண்ணீர் ஊற்றுதல் போன்றவற்றை செய்தால், 500 கலோரி வரை குறையும். 

டென்னிஸ்: 30 நிமிடங்களில் 250 கலோரி எரிய உதவும். சதைகள் வலுவடைவதும் மூளைக்கும் அமைதி கிடைக்கும்.

யோகா: ஒரு மணி நேரம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால், 250 கலோரியை இழக்கலாம். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கை, கால் உள்பட அனைத்து உறுப்புகளும் சொன்னதைக் கேட்கும்.

அதிவேகப் பயிற்சி: 30 நிமிடம் செய்தால், 220 கலோரியை இழக்கலாம். கொழுப்பும் எரிந்து, அலர்ட்டாக உடலை வைத்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com