லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பூண்டு சாதம் 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும்.

News image
Updated On :27 நவம்பர் 2022, 12:30 am

தேவையான பொருள்கள்: 

வடித்த சாதம் - ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2  தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
சிறு பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு

செய்முறை:  

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி , பூண்டின் பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.  சுவையான பூண்டு சாதம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.