காலிஃபிளவர் ஊத்தப்பம்
காலி ஃபிளவரை சின்ன துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் நன்றாக அலசவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய், முந்திரி சேர்த்து விழுதாக அரைக்கவும்.


தேவையானவை:
தோசை மாவு- 2 கிண்ணம்
காலிஃபிளவர்- 1 கிண்ணம்
பெரிய வெங்காயம்- 1 கிண்ணம்
தக்காளி- 2
முந்திரிப் பருப்பு- 6
தேங்காய்த் துருவல்- 2 மேசைக் கரண்டி
இஞ்சி, பூண்டு- 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- அரை தேக்கரண்டி
கடுகு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
காலி ஃபிளவரை சின்ன துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் நன்றாக அலசவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய், முந்திரி சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு, தக்காளி, காலி ஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். அடுப்பில் தவாவை காய வைத்து, கணமான தோசையை வார்க்கவும். பின்பு, அதன் மேல் பரவாலாக காலிஃபிளவர் மசாலாவைத் தடவி மடிக்காமல் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...