உடல் நலமும், மன வளமும் நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியம். மன நலம் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டியவை:
நல்ல உறக்கம் :
மூளை ஒரு தசை போன்றது. அது சரியாக செயல்பட முறையான தூக்கம் அவசியம். அப்போது தான் எப்போதும் நினைவுகளை ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியும். இரவு நேரம் உறக்கம் என்பது மிக அவசியம்.
மனத்திரையில் காட்சியாக பார்த்தல்: எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நம் மனத்திரையில் ஒருமுறை ஓட்டி பார்ப்பது நல்லது. அப்போது அதனை முழுமையாகப் புரிந்து கொள்வதுடன், நினைத்த மாத்திரத்தில் ஞாபகத்துக்குக் கொண்டு வரவும் முடியும்.
உருவகப்படுத்துதல் :
புதிதாக கற்று கொள்ளும் விஷயங்கள், ஏற்கெனவே நமக்கு நன்கு பரிச்சயமாக கதைகள், கேரக்டர்கள் உடன் தொடர்புப்படுத்தி உருவகப்படுத்தி கொண்டால், எளிதில் மறக்காது.
துண்டுகளை ஒன்று சேர்த்தல் :
நமக்கு கிடைக்கும் தகவல்களைத் தனித்தனியாக ஒவ்வொரு துண்டுகளாகக் கருதி, ஒன்றோடு ஒன்று சேர்த்து பெரியதாக மாற்றி கொண்டே வந்தால், ஒன்றின் வழியே, மற்றொன்றை நினைவுப்படுத்தி கொள்ளலாம்.
நினைவுப்படுத்துதல்: கற்று கொண்டு பயிற்சி எடுத்தால் நினைவுப்படுத்துதல் - ரிபீட்டு ஆகும். கற்றுக்கொண்டவற்றை மதிப்பீடு செய்யும் போது, மேம்போக்காக, மறுவாசிப்பு செய்வது போல் இல்லாமல், நினைவுப்படுத்தி கொள்வதை உறுதி செய்து கொள்ளலாம்.
நம்மிடம் நாமே பேசுவது : ஒருநாளைக்கு ஒருமுறையாவது, நம்மிடம் நாமே பேச, நல்லனவற்றை நினைவில் கொள்ள முடியும்.
மனதை கட்டுப்படுத்த முடிந்தால், வாழ்க்கை எளிதில் கட்டுப்படும். பெரிய விஷயங்களை கற்றுகொள்ளுதல், ஒழுக்கத்தைப் பின்பற்றுதல், நிறை, குறைகள் என விமர்சன ரீதியாக அணுகும் போது, நம் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


