மிளகு அடை

மிளகு அடை

முழு வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டவும். மிளகு கொர, கொரப்பாகப் பொடிக்கவும். உளுந்துடன் உப்பு சேர்த்து, நீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

தேவையானவை:

வெள்ளைஉளுந்து- 1 கிண்ணம்
மிளகு- 1 தேக்கரண்டி
அரிசி மாவு- 2 மேசைக் கரண்டி
பெருங்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முழு வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டவும். மிளகு கொர, கொரப்பாகப் பொடிக்கவும். உளுந்துடன் உப்பு சேர்த்து, நீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, பொடித்த மிளகு, பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டி, பொரித்து எடுக்கவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com