சாலட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை...

காய்கறி சாலட் செய்யும்போது ஓரு கைப்பிடி பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துச் சேர்த்தால் சாலடின் சுவையும், சத்தும் அதிகமாக இருக்கும்.
சாலட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை...

காய்கறி சாலட் செய்யும்போது ஓரு கைப்பிடி பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்துச் சேர்த்தால் சாலடின் சுவையும், சத்தும் அதிகமாக இருக்கும்.

 தோசை மாவு குறைவாக இருக்கிறதா? மாவில் சிறிது ஓட்ஸ் சேர்த்து தோசை. வார்த்துப் பாருங்கள். மெத்தென்ற தோசை அள்ளும் சுவையுடன் ரெடியாகிவிடும்.

மோர்க்குழம்புக்கு அரைத்து விடும்போது கடலைப்பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பை ஊறவைத்து அரைத்து விட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் கெட்டித்தயிர் ஊற்றி, அதன் மேல் தக்காளி சாஸ் விட்டு சாட் மசாலா தூவினால் சாப்பிட ருசியாக. இருக்கும்.

சாம்பார், கூட்டு, வெங்காய வத்த குழம்பு இவை எல்லாவற்றுக்கும் துளி வெல்லம் போட்டுப் பாருங்கள் அதன் சுவையே அலாதி தான்.

வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.

கலவை சாதம் கலக்கும்போது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். சாதம் பொலபொல வென்று உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம்  பருப்புக்கு பதிலாக வேர்கடலையை  வறுத்து அரையுங்கள். துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

தட்டை  செய்யும்போது மைதா மாவு, அரிசி மாவுக்கு பதிலாக கோதுமை மாவை  ஆவியில் வேக வைத்து செய்யலாம். தட்டை அதிக ருசியுடன் இருக்கும்.

ஊற வைத்த பச்சைப் பயறை முளை கட்டணுமா? அதைக் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜ் ஸ்டெபிலைசரின் மேல் வைத்தால் மறுநாள் பெரிதாக முளை  விட்டிருக்கும்.

இரவில் மிஞ்சிய பழைய சாதத்துடன் மைதாமாவைக் கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து நெய் விட்டு தோசை வார்த்தால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.

மரவள்ளிக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து கழுவி தோலெடுத்து சிறிது சிறிதாக  நறுக்கிக் கொண்டு, ஊற வைத்த உளுத்தம் பருப்போடு சேர்த்தரைத்து வடை தட்டினால் தனிச் சுவையுடன் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கலில் இனிப்பு குறைவாக இருந்தால் பரிமாறும்போது ஒரு கரண்டி பைனாப்பிள் ஜாமைக் கலக்கவும். இனிப்பு அதிகமாவதுடன் மணமும்  இரட்டிப்பாக இருக்கும்.

சமையலறையில் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் பருப்பு வகைகளை போடுவதற்கு முன்பு அந்த டப்பாக்களின் அடியில் கொஞ்சம் கல் உப்பு போடவும். நீண்டநாட்கள் ஆனாலும் பருப்பில் வண்டு, பூச்சிகள் வராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com