அகத்திக் கீரையின் பயன்கள்!
By ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி. | Published On : 02nd February 2022 06:00 AM | Last Updated : 02nd February 2022 06:00 AM | அ+அ அ- |

அகத்திக்கீரை இரும்புச் சத்து மிகுந்த ஒன்று என்பதால் அதனை அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவதால் நன்மை பயக்கும்.
அகத்திக் கீரை மட்டுமல்லாது அதன் காயையும், பூவையும் கூட கறி செய்து சாப்பிடலாம்.
அகத்திக்கீரை உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க வழி செய்கிறது. உடலில் உண்டாகும் பித்தத்தைத் தணிக்கிறது. இக்கீரையின் முக்கியக் குணம் விஷமருந்தின் வீரியத்தை முறிக்கிறது. கண்பார்வை தெளிவடைகிறது. பற்கள் உறுதிபட உதவுகிறது. ரத்த அணுக்களை வலிமைமிக்க தாக்குகிறது. உடல் வலுவடைய உதவுகிறது.
அகத்திக் கீரையும் அரிசி கழுவிய நீரும் கலந்து சூப் போல வைத்துச் சாப்பிட்டால் இருதயம், மூளை, கல்லீரல், ஜீரணப்பை வலிமை பெறுகிறது.
அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்துச் சாறு பிழிந்து அதில் தேனைக் கலந்து சாப்பிட்டால் கடுமையான வயிற்றுவலி உடனே குணமாகிறது.
அகத்திக் கீரை குடற் புண்களையும் ஆற்றுகிறது.