மாங்காய் கொத்சு
By ஆர்.ஜெயலட்சுமி | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 01st August 2022 06:01 PM | அ+அ அ- |

தேவையானவை:
மாங்காய்-2
வெல்லம்- 200 கிராம்
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
கடுகு- அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 3
பச்சை மிளகாய்-3
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை நன்றாக அலம்பி வட்டவட்டமாகத் தோலுடன் நறுக்க வேண்டும். அடிகனமான பாத்திரம் ஒன்றில் தேவையான தண்ணீர்விட்டு, நறுக்கிய மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு மூடி வேக வைக்க வேண்டும். வெந்த மாங்காயில் கரைத்த வெல்லத்தைவிட்டு அரிசி மாவை கரைத்துவிட்டு, பதமானவுடன் கீழே இறக்க வேண்டும். எண்ணெயை நன்றாகக் காய வைத்து, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டுச் சிவந்தவுடன் இதை கொத்சுவில் விட வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...