மாங்காய் கேரட் அவியல்
By -ராதிகா அன்பழகன் | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 01st August 2022 06:00 PM | அ+அ அ- |

தேவையானவை:
புளிப்பு குறைந்த மாங்காய்-2
கேரட்- 150 கிராம்
தேங்காய்த் துருவல்- அரை டம்ளர்
சீரகம்- அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 5
வெள்ளைப் பூண்டு-1
கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
மாங்காய், கேரட் ஆகிய இரண்டையும் நீளவாக்கில் நடுத்தரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து, மிக்சியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மாங்காய், கேரட் துண்டுகள், அரைத்த மசாலா ஆகியவற்றை இட்டு, போதுமான அளவு நீர் சேர்த்து உப்பிட்டு நன்றாகக் கலந்து வேக வைக்கவும். கேரட், மாங்காய் நன்கு வெந்து நீர் முழுவதும் நன்கு சுண்டியதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துவிட்டு இறக்கவும். அவியல் தயார்.