பாதத்தைக் கவனியுங்க..!
By செளமியா சுப்ரமணியன் | Published On : 26th June 2022 04:24 PM | Last Updated : 26th June 2022 04:24 PM | அ+அ அ- |

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில பாஸ்பரஸ் இதில் உள்ளன. எல்.டி.எல். கொழுப்பைக் குறைத்து, ஹெச்.சி.எல். கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை இஞ்சி பாதுகாக்கிறது. சளி, காய்ச்சலின் அறிகுறிகளை உணர்த்த பாரம்பரியமாக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
வெதுவெதுப்பான நீரில், காலை, இரவில் தினமும் பாதத்தைக் கழுவிவிட்டு தேங்காய் எண்ணெய் தடவினாலே பாத வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் பாதங்களின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது.
வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவியவுடன் 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் பாத சருமத்தின் தன்மை, ஈரப்பதத்தை அதிகரிக்க செய்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து அதில், பாதங்களை 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவவும். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால், பாதவெடிப்பு குறைவதுடன், சருமம் புத்துணர்ச்சியும் பெறும்.
பாதங்களை அவ்வப்போது நன்கு தண்ணீரில் கழுவுவது நல்லது. உடலைச் சுத்தம் செய்யும் அளவுக்கு பாதங்களைப் பலரும் சுத்தம் செய்வதில்லை. நன்கு சோப்பு போட்டு கழுவுவதால், கால் வெடிப்புகளைத் தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி, காலுறை அணிந்து கொண்டு உறங்க செல்லுங்கள். காலையில் எழுந்து பாதங்களை கழுவலாம். ஒருவாரம் தொடர்ந்து இதனை செய்து வந்தால், வறண்ட பாதங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.