மாநகராட்சி... ஆளப்போகும் மகளிர்!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண்கள் மேயராக பதவி ஏற்றுள்ளனர். விவரம் வருமாறு:
மாநகராட்சி... ஆளப்போகும் மகளிர்!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 பெண்கள் மேயராக பதவி ஏற்றுள்ளனர். விவரம் வருமாறு:

ஆர். பிரியா
சென்னை

மிக இளம் வயதில் மேயரானவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. வயது 28. எம்.காம். படித்தவர். இவருக்குஒரு பெண் குழந்தை உண்டு. முதன்முதலாக உறுப்பினராகி மேயர் ஆகியிருக்கிறார். சென்னையின் மூன்றாவது பெண் மேயர் இவர். தந்தையும் - மாமானார் செங்கை சிவமும் பாரம்பரிய கட்சிக்காரர்கள். கணவர் ராஜாவும் அப்படியே. செங்கை சிவம் சென்னை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

எம். மகாலட்சுமி
காஞ்சிபுரம்

முதுநிலை பட்டதாரி. இன்போசிஸ் நிறுவனத்தில் மூத்த பொரியாளராக இருந்தவர். பணியிலிருந்து விலகி தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். கணவர் யுவராஜ் இளைஞர் அணியில் பதவி வகிக்கிறார்.


கே. வசந்தகுமாரி
தாம்பரம்

ரசாயண பொறியியல் பட்டதாரி. தாம்பரம் மேற்கில் உள்ள கடப்பேரி பகுதியில் வசித்து வருகிறார். கட்சி ஈடுபாடு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவர் பெயர் கோகில செல்வன்.


சுஜாதா ஆனந்தகுமார்
வேலூர்

முதுநிலை பட்டதாரி. ஆசிரியர் பயிற்சி பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காதவர். வேலூரின் இரண்டாவது பெண் மேயர். குடும்பத் தலைவி. இரு குழந்தைகளின் தாய்.


கவிதா கணேசன்
கரூர்

முதுநிலைப் பட்டதாரி. கணவர் கரூர் கணேசன், தலைமைக் கழகப் பேச்சாளர். 2006-11 ஆண்டுகளில் இனாம் கரூர் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். கவிதா இரு குழந்தைகளின் தாய்.

சு. நாகரத்தினம்
ஈரோடு

கணவர் சுப்ரமணியன் ஈரோடு நகரச் செயலாளர். ஆரம்பப்பள்ளி வரை படித்திருக்கிறார். நகராட்சி உறுப்பினர் தேர்தலில் முதன்முறையாக பங்கேற்று வெற்றி பெற்றிருக்
கிறார்.

கல்பனா ஆனந்தகுமார்
கோவை

பத்தாம் வகுப்பு வரை படித்தவர். வாடகை வீட்டில் வசிக்கிறார். செயற்கை வைரம் தயாரிக்கும் நிறுவனத்தில் இதுவரை பணிபுரிந்து வந்தார். கணவர் ஆனந்தகுமார் ஈ- சேவை மையம் நடத்துகிறார்.


இந்திராணி பொன் வசந்த்
மதுரை

முதுநிலை பட்டதாரி நூலக அறிவியல் படித்தவர் கணவர் பொன். வசந்த் வழக்குரைஞர். மதுரை மாவட்ட ஆரப்பாளையம் பகுதியில் செயலாளராக உள்ளார். மதுரையின் இரண்டாவது பெண் மேயர் ஆவார்.


ஜோ.இளமதி
திண்டுக்கல்

திண்டுக்கல்லின் முதன் பெண் மேயர் ஆவார். நடுத்ஹதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடன் வெற்றி பெற்ற 5- பெண் உறுப்பினர்களில் இவருக்கே மேயராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


சங்கீதா இன்பம்
சிவகாசி

நகராட்சியாக இருந்த சிவகாசி 2021- இல் மாநகராட்சியானது. 34 -ஆவது வார்டில் போட்டியிட்டு உறுப்பினரானார் சங்கீதா. தற்போது சிவகாசியின் முதல் மேயராகி உள்ளார்.

சுந்தரி ராஜா
கடலூர்

கடலூரில் வெற்றி பெற்ற சுந்தரி மிக நீண்ட ஆண்டுகளாகவே அரசியலில் உள்ளார். பி.ஏ பட்டதாரியான இவரின் கணவர் கே.எஸ்.ராஜா கடலூர் நகர செயலாளராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com