வெற்றிலை பக்கோடா 

வெற்றிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
வெற்றிலை பக்கோடா 

தேவையானவை:

கார்ன் பிளவர் -  1 கிண்ணம்
அரிசி மாவு -கால் கிண்ணம்
கடுகு -2  மேசைக் கரண்டி
வெங்காயம் -  ஒன்று பொடியாக நறுக்கியது,
இளம் வெற்றிலை - 5,
இஞ்சி -  சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
உப்பு-  தேவையான அளவு
எண்ணெய் -அரை லிட்டர்.

செய்முறை:

வெற்றிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் கார்ன் பிளவர் ,  அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெற்றிலை துண்டுகள்,  வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில்,  தண்ணீரை கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும்.தொடர்ந்து வாணலியில்  எண்ணெயை காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை  சிறிது சிறிதாக கிள்ளி போடவும். நன்றாக வெந்தவுடன் எடுக்கும் சுவை மிகுந்த பக்கோடா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com