சாதனைப் பெண்கள்..!

ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில்  ஆண் நடுவர்கள் மட்டுமே இருந்து வந்தனர்.
சாதனைப் பெண்கள்..!


ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில்  ஆண் நடுவர்கள் மட்டுமே இருந்து வந்தனர். ஆனால் முதன்முறையாக நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி 20 போட்டியில் பெண் நடுவர் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன் என்ற பெண் நடுவர் பங்கேற்று,  ஆண்கள் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு ஜெர்மனியின் சிறப்புச் சாதனைக்கான உயரிய விருது வழங்கப்பட்ட உள்ளது. அவரது 16 ஆண்டு கால சாதனையை அங்கீகரிக்கும் வகையில்,  மெர்க்கலுக்கு விருது அளிக்க அதிபர் பிராங் வால்டர் திட்டமிட்டுள்ளார்.


நான்கு முறை அதிபராக இருந்த ஏஞ்செலா மெர்க்கல் சிறந்த சாதனைக்கான விருது பெறுகிறார்.  இந்த விருதைப் பெறும் அந்த நாட்டின் மூன்றாவது தலைவர்.
மேற்கு ஜெர்மனியின் முதல் தலைவர்  கோன்ராட்,  ஜெர்மனியை ஒருங்கிணைக்கப்பாடுபட்ட ஹெல்மெட் கோல் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com