

தேவையானவை:
பீட்ரூட்' 4
வெங்காயம்'5
பச்சை மிளகாய்' 4
இஞ்சி' 1 துண்டு
பொட்டுக்கடலை' 200 கிராம்
சோப்பு, சீரகம்' 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்' 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்' அரை தேக்கரண்டி
கடலை மாவு' 1 மேசைக்கரண்டி
கடலை மாவு' 1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய்' 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்' தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை கழுவி துருவ வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறியதாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலையை மாவாகத் திரித்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சோப்பு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைய வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.