பலாக்காய், வாழைப்பூ சாப்பிட்டால்...?

மருத்துவக் குணங்களைக் கொண்ட பலாக்காயையும் வாழைப்பூவையும் சாப்பிடுவது மிகவும் நல்லது. அவை என்னென்ன பயன்களைத் தரும் என்பதை பார்ப்போம்.
பலாக்காய், வாழைப்பூ சாப்பிட்டால்...?

மருத்துவக் குணங்களைக் கொண்ட பலாக்காயையும் வாழைப்பூவையும் சாப்பிடுவது மிகவும் நல்லது. அவை என்னென்ன பயன்களைத் தரும் என்பதை பார்ப்போம்.

பலாக்காய்:

லாக்காய் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும்.  தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.  உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். பலா பிஞ்சை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியன  உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக் கூடாது.

வாழைப்பூ:

ழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.  ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தம்,  ரத்தச் சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

ரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத் தன்மை அதிகம் உதவுகிறது.  

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.

மூலநோயின் பாதிப்பால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு,  ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.  வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாத விலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு, அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்தால் நோய்கள் தீரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com