சமையல் அறையில் புதினாச் செடியை வளர்த்து வந்தால் சிலந்தி, பூச்சிகள் வராது.
இரவில் படுப்பதற்கு முன் பிளீச்சிங் பௌடரை சமையல் அறையின் மூலைகளில் போட்டுவிட்டால், கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
எலுமிச்சை சாற்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து, தேய்க்க குழாய்கள் பளிச்சிடும்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.
மோர்க் குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்துப் போட்டுவிட்டால் ருசியாக இருக்கும்.
பிட்ரூட் சூப் செய்யும்போது, தக்காளியையும் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.
கீரையை சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தால் சத்து வீணாகாது.
சூடான உணவுப் பொருள்களில் எலுமிச்சையைச் சேர்த்தால், உணவு கசப்பாகிவிடும். சூடு ஆறியவுடன் சேர்ப்பதுதான் சரி.
கேசரி தயாரிக்கும்போது இரு பேரீச்சம் பழங்களை பொடியாக அரிந்து போட்டால், சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


