சோளம் பார்லி அவல் பொங்கல்
பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.


தேவையானவை:
பார்லி- 100 கிராம்
அவல் - 250 கிராம்
உடைத்த சோளம்- ஒரு கிண்ணம்
மிளகு, சீரகம் (பொடித்தது) - 2 தேக்கரண்டி
வறுத்த முந்திரிப் பருப்பு - 20
நெய்- 100 மில்லி
பொடியாக நறுக்கிய இஞ்சி- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து, வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு, உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...