47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சர்க்கரைப் பொங்கல்

அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும்.  ஒரு பங்கு அரிசிக்கு பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு,  குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

News image
Updated On :8 ஜனவரி 2023, 12:30 am

கவிதா சரவணன்

தேவையானவை: 

அரிசி-  250 கிராம்
வெல்லம்-  500 கிராம்
நெய்-  100 மில்லி
வறுத்த  முந்திரி-  20
ஏலக்காய்த் தூள்- சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 20
பால்-  200 மில்லி
குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

செய்முறை:

அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும்.  ஒரு பங்கு அரிசிக்கு பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு,  குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ , மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும். விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.