47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாட்டி வைத்தியம்...

பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கு மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட, கருப்பையில் உள்ள அழுக்குகள், நச்சுகள் நீங்கும். கருப்பை பலம் பெறும்.

News image
Updated On :15 ஜனவரி 2023, 12:30 am

கவிதா சரவணன்

பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கு மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட, கருப்பையில் உள்ள அழுக்குகள், நச்சுகள் நீங்கும். கருப்பை பலம் பெறும்.

மாசிக்காய் பொடியை நீர்விட்டு, நன்கு குழைத்து ஆசனவாயில் தடவி வர மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் குணமாகும். தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து, தினமும் தடவிவர குணம் கிடைக்கும்.

அடிபட்ட காயத்தில் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, மாசிக்காயை நெருப்பில் சுட்டு சாம்பலை தடவி வர ரத்தம் வெளியேறுவது நிற்கும்.

போதைப் பொருள் விஷத் தன்மை நீங்க,  மாசிக்காய் தூளை 5 கிராம்  அளவுக்கு மூன்று வேளையும் சாப்பிட்டால் நஞ்சை முறிக்கும்.

ஜலதோஷம், டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு, தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கு மாசிக்காய் பொடியை கற்பூரவல்லி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட நிவாரணம் பெறலாம்.

மாசிக்காய், ஜாதிக்காய், ஆவாரம் பசை, ஏலக்காய் ஆகியவற்றை நன்கு பொடித்து, வல்லாரை இலைப்பொடியை சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட நரம்புகள் வலுப்பெறும்.

தோலில் சுருக்கும் ஏற்படுவதைத் தடுக்க, இளமைத் தோற்றம் பெற மாசிக்காய், ஜாதிக்காய், கிராம்பு ஆகியவற்றை பொடியாக்கி, ஒன்றாகக் கலந்து உடலுக்குப் பூசி குளிக்க குணம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.