கத்தரிக்காய் அம்பால்

புளியை ஊற வைத்து எடுத்துகொள்ள வேண்டும். கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
கத்தரிக்காய் அம்பால்


தேவையானவை: 

கத்தரிக்காய்- 250 கிராம்
தக்காளி- 2 பெரியது, தோலை உரித்து நறுக்க வேண்டும்.
புளி- எலுமிச்சைப் பழம் அளவுக்கு..
சர்க்கரை- 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை- 25
கடுகு- 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி- 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

புளியை ஊற வைத்து எடுத்துகொள்ள வேண்டும். கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். தேவையான எண்ணெய்விட்டு கடுகைப் போட்டு அது வெந்ததும் கொஞ்சம் மஞ்சள் பொடியுடன் கத்தரிக்காயை போட்டு வதக்க வேண்டும். சற்று வதங்கியதும் தக்காளி, சர்க்கரை, திராட்சை, மிளகாய்ப் பொடி, உப்பு முதலியவற்றைப் போட்டு புளித் தண்ணீரையும் விட்டு நன்றாக வதக்கவும். வெந்ததும்  இதனுடன் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

-ஆர்.ஜெயலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com