முதுகு வலி பிரச்னைக்கு தீர்வு உண்டு!

முதுகு வலியானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு வழக்கமான பிரச்னையாக மாறிவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

முதுகு வலியானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு வழக்கமான பிரச்னையாக மாறிவிட்டது.  நம்முடைய தினசரி உணவு, பருப்பு வகைகள் கூட முதுகு வலி பிரச்னை ஏற்படலாம்.

தீர்வு

முதுகு வலியை உடற்பயிற்சியாலும், சரி செய்யலாம். 

கை, கால்களை மெதுவாக நீட்டி மடக்குதல்,  நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் வலுவாகி, இறுக்கமாவது தடுக்கப்படுகிறது. 

சரியான ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல் முக்கியம்.

பணி,  வாழ்க்கை முறையால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும், நிற்பதாலும் கீழ் மூட்டு வலி ஏற்படும்.

தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள, எடை தூக்குதல், உட்காருதல், உடலை நகர்த்துதல் போன்ற செயல்களின்போது சரியான உடல் இயக்கவியலைப் பின்பற்றவும். 

வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

கடினமான,  முடிச்சு ஏற்பட்ட முதுகுத் தசைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மசாஜ் செய்யவும்.

கீழ் முதுகு வலியால் அவதிப்படும்போது மல்லாந்து படுப்பதில் ஒருவித அசெளகரியம் ஏற்படுவதால் முழங்காலை சற்று மடக்கி, ஒருபக்கமாக சரிந்து படுக்கவும். 

இரு கால்களுக்கு இடையே தலையணை வைக்கவும். 

மல்லாந்து படுப்பதனால், தொடைகளின் கீழ் தலையணை அல்லது சுருட்டப்பட்ட துண்டினை  வைப்பதன் மூலம் கீழ் முதுகின் மீது ஏற்படும் அழுத்தம் குறைகிறது.

நிலையான உறுதியான மேற்பரப்பின் மீது படுக்கவும். 

இதுதவிர, குதிகால் உயரமான செருப்புகள், ஷூக்கள் அணிவது, நிகோடின் உபயோகம் போன்றவை முதுகெலும்பு வட்டுகளில் சிதைவை ஏற்படுத்தி இரத்தஓட்டத்தைக் குறைப்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், முதுகுக்குத் தாங்கலாக இருக்கும் நாற்காலியை பயன்படுத்தவும்.

கணினியின் திரை கிட்டத்தட்ட கைக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறும், கணினி திரை கண்களின்மட்டத்திற்கு சற்று குறைவான உயரத்தில் இருக்குமாறும் வைக்கவும்.

போதுமான கால்சியம், பாஸ்பரஸ் சத்துள்ள உணவை சரியானஅளவில் உண்ணவும். மீன், இறைச்சி, பால் பொருட்கள், கோதுமை, பார்லி, சோளம் போன்ற தானியங்கள், ஓட்ஸ், கீரை உள்ளிட்ட உணவு பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.

இவற்றை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com