மகளிர் டிப்ஸ்

வாய்ப்புண் குணமாக, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் போதும்.
மகளிர் டிப்ஸ்

மருத்துவம்

வாய்ப்புண் குணமாக, மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் போதும்.
நெஞ்சு சளி கரையை அத்திப்பழத்தை காலை, மாலை சாப்பிட்ட வேண்டும்.
இருமலுக்கு மிளகை வறுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை இருந்தால், கொதிக்கும் நீரில் மஞ்சள் தூளைப் போட்டு ஆவி பிடிக்கவும்.
வயிற்றுப்புண்ணைத் தடுக்க சூடான உணவு, குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

சமையல்

மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் சிறிது நேரம் வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறுமொறுவென்று இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்தால், கமகமவென்று இருக்கும்.
குருமா செய்யும்போது, சிறிது இஞ்சியையும், ஓமத்தையும் சேர்த்தால் சுவை கூடும். எளிதில் ஜூரணமாகும்.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது ஓமப்பொடி சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்.

ஆர்.கே.லிங்கேசன்

ஆன்மிகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகேயுள்ள ஆத்மநாதர் கோயிலில் சிவன் குருநாதராகத் தோன்றி, மாணிக்கவாசகருக்கு உபதேசித்தார். 
மதுரை மாவட்டம் திருவாதவூர் மறைநாதசுவாமி கோயில் மாணிக்கவாசகர் அவதரித்த தலம். 
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில்ல சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் சிவன் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்தார். 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாணிக்கவாசகர் சொல்ல, சிவ பெருமான் திருவாசகத்தை எழுதிய தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com