லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிரிட்ஜில் வேண்டாம்

அதிக குளிர் காரணமாக, அதன் செல் சுவர்கள் உடைந்து அதன் உண்மையான சுவையை இழந்துவிடும்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm


பிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்களில் சில:

தக்காளி : அதிக குளிர் காரணமாக, அதன் செல் சுவர்கள் உடைந்து அதன் உண்மையான சுவையை இழந்துவிடும்.

தேன் : பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டதால் தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. பிரிட்ஜில் வைத்தால் தேன் உறைந்து போகவும், பயன்படாத முடியாத அளவுக்கு மாறும்.

காபி தூள் : இது அனைத்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, பிற காய்கறி வாசனைகளை இழுக்கச்செய்யும்.

வாழைப்பழம் :  குறைந்த வெப்பநிலையில் இருக்கும்போது, வாழைப்பழங்கள், இயற்கையான பழுக்க வைக்கும் நொதிகளில் குறுக்கிடுவதால் கறுப்பாக மாறக் கூடும். எனவே வாழைப்பழங்கள், விரைவில் அழுகி போவதற்கு வாய்ப்புள்ளது.

வெங்காயம் : இது பொதுவாக தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால், எளிதில் பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

பூண்டு : ஈரப்பசையால் விரைவில் சுருங்கி போவதோடு முன்கூட்டியே முளைத்துவிடும் வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு : பிரிட்ஜில் வைப்பதால், அதில் உள்ள ஸ்டார்ச் , சர்க்கரையாக மாறும். விரைவாக கெட்டு போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.