வெள்ளரி விதைப் பாயசம்
By ஆர்.ஜெயலட்சுமி | Published On : 09th April 2023 12:00 AM | Last Updated : 09th April 2023 12:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
வெள்ளரி விதை 200 கிராம்
ஏலக்காய் 5
குங்குமப்பூ சிறிதளவு
பால் 500 மி.லி.
அரிசி மாவு 2 தேக்கரண்டி
சர்க்கரை 250 கிராம்
சாரைப் பருப்பு4
பாதாம் பருப்பு4
முந்திரிப் பருப்பு 5
திராட்சை 4
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
நெய் 25 கிராம்
செய்முறை:
பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். பிறகு பாலைவிட்டு கொதிக்க வைத்து சர்க்கரையைப் போட்டு கரைய விட வேண்டும்.
குங்குமப்பூவையும், அரிசி மாவையும் கரைத்துவிட்டு ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, சாரைப் பருப்பு, திராட்சை வறுத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.