ரவா குஸ்கா

முதலில் நெய்யைக் காயவைத்து, ரவையை வறுத்துத் தனியே வைத்துகொள்ளுங்கள்.
ரவா குஸ்கா

தேவையானவை:

ரவை 1 கிண்ணம்
தேங்காய் பால் 2 கிண்ணம்
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய் 2
இஞ்சி, பூண்டு விழுது1 தேக்கரண்டி
புதினா இலைகள்10
மல்லித்தழை சிறிது
எலுமிச்சம்பழச் சாறு 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நெய் 2 தேக்கரண்டி
தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 1
எண்ணெய் 2 மேசைக் கரண்டி

செய்முறை: 

முதலில் நெய்யைக் காயவைத்து, ரவையை வறுத்துத் தனியே வைத்துகொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பின்னர், தேங்காய்ப் பாலை ஊற்றி, அத்துடன் ஒரு கிண்ணம் தண்ணீரையும் தேவையான உப்பையும் சேர்த்துக் கலக்குங்கள். தேங்காய்ப் பால் நன்கு கொதிக்கும்போது,  வறுத்து வைத்துள்ள ரவை, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, மூடி வைத்துவிட்டு தீயை குறையுங்கள். பத்து நிமிடம் நன்கு வேகவிட்டு இறக்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com