அரிசி ரவா மிளகு உப்புமா
By லோ.சித்ரா | Published On : 09th April 2023 12:00 AM | Last Updated : 09th April 2023 12:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
பச்சரிசி அரை கிண்ணம்
துவரம் பருப்பு கால் கிண்ணம்
கடலைப் பருப்பு கால் கிண்ணம்
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 2
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
வறுத்த முந்திரி அரை கிண்ணம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க: கடுகு அரை தேக்கரண்டி உளுந்துப் பருப்பு 1 தேக்கரண்டிகறிவேப்பிலை சிறிது
பெருங்காயம் கால் தேக்கரண்டி
எண்ணெய் 2 மேசைக் கரண்டி
செய்முறை:
அரிசி முதல் காய்ந்த மிளகாய் வரை கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாக கரகரப்பாகப் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேருங்கள். பின்னர், இரண்டரை கிண்ணம் தண்ணீர் ஊற்றுங்கள். அதில், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்க விடுங்கள். அரிசி ரவை கலவையை சேர்த்து நன்கு கிளறி தீயை குறைத்து மூடிவைத்து நன்கு வேக விட்டு இறக்கிப் பரிமாறுங்கள். மிளகு மணத்துடன் சுவைக்கும் உப்புமா இது.