ஆன்மிகக் குறிப்புகள்..
By நஞ்சன் | Published On : 09th April 2023 12:00 AM | Last Updated : 09th April 2023 12:00 AM | அ+அ அ- |

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய 7 புண்ணிய நதிகளை மனதில் நினைத்துகொண்டு குளித்தால் புண்ணியம் கிடைக்கும். குளிக்கும் நேரத்தில் எந்தவித சிந்தனையும் வராமல் இருக்க வேண்டும். இதனால் தண்ணீரின் குளிர்ச்சி மனதில் உணரப்பட்டு, உடலும் மனமும் குளிர்ச்சியாகிறது.
விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த பூக்கள்: அரளி, எருக்கு, ஊமத்தை, கொன்றை செவ்வந்தி, செண்பகம், செங்கழுநீர்ப் பூ, தாழம்பூ, தும்பை, பாதிரி, மந்தாரை, மல்லி, மாம்பூ, வில் புஷ்பம், வெள்ளரளி, ஜாதி மல்லி. உகந்த இலைகள்: அருகம்புல், அரளி இலை, அரசு, இலந்தை இலை, ஊமத்தை, கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, நாயுருவி, நெல்லி, நொச்சி, பவழமல்லி, மருக்கொழுந்து, மாவிலை, வில்வதனம், வெள்ளருக்கு, வெண்மருதை, வன்னி, மாசிப்பச்சை, விஷ்ணுகிராந்தி, ஜாதி.