

தானாகவே எல்லாம் நடக்கும் என்று இருக்காமல், நாமும் முயற்சிக்க வேண்டும்.
தற்போதைய நிலைமை, நம் கடந்தகால செயல்களின் விளைவாகும் என்பதை ஏற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் எப்போதும் மற்றவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும்.
நம் சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.வாழ்க்கையில் எது நடந்தாலும், அது நம்மால் மட்டுமே நடக்கும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் கடந்த கால செயல்கள், இன்று நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது, தற்போதைய நிகழ்காலம் நாளை நாம் யார் என்பதை தீர்மானிக்கும்.
ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நம் கவனம் ஆன்மிகப் பார்வையோடு இணைந்திருக்கும் வரை, நமக்கு பேராசை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இருக்காது. நாம் முழுமையாக நம்பும் விஷயங்களை, இதயத்தில் இருந்து பிறருக்கு கொடுக்க வேண்டும்.
தற்போதைய தருணத்தில் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சிக்கான ஒரே வழி. கடந்த காலத்தில் மூழ்கி திளைப்பதும், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதும் நம் மகிழ்ச்சியை குறைக்கும்.
வாழ்க்கையில் கற்று கொண்ட பாடங்களை, நடைமுறைக்கு கொண்டு வராத வரை வரலாறு மீண்டும் நிகழும். நாம் வியத்தகு மாற்றங்களைக் கண்டால்,வளர்ந்து வருகிறோம் என அர்த்தம். வெற்றிக்கு பொறுமை, தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
பெரியதோ, சிறியதோ நாம் செய்யும் ஒவ்வொரு பங்களிப்பையும் மனதார செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.